பெரும் பதற்றம்… தவெக ஆட்சி கவிழ்ப்பு விவகாரம்… சற்றுமுன் அதிர்ச்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பெரும் பதற்றம்… தவெக ஆட்சி கவிழ்ப்பு விவகாரம்… சற்றுமுன் அதிர்ச்சி..!!

Published

on

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி நடந்ததாகக் கூறப்படும் வழக்கு நாளுக்கு நாள் தீவிரமடைந்து பூதாகரமாகி வருகிறது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக, செந்தில் பாலாஜிக்கு நாளை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஒருவேளை அவர் நாளை ஆஜராகவில்லை என்றால், அவருக்கு எதிராகக் கைது நடவடிக்கையைத் தீவிரப்படுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கைகளின் காரணமாகக் கரூர் பகுதியில் தற்போது பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

Advertisement

மேலும், இந்த சதி வழக்கில் ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி காவல்துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை, நீதிமன்றம் வரும் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in