LATEST NEWS
“கட்சியை விட்டு போங்கடா..!”தருமபுரி தம்பிகளை வெளுத்து வாங்கிய சீமான்… சோஷியல் மீடியாவை அதிரவைக்கும் லீக் ஆடியோ..!!
தருமபுரி மண்டல ஒருங்கிணைப்பாளர் அரிமா செந்தில்நாதனின் செயல்பாடுகள் திருப்தியளிக்காததால், மாவட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் அவருக்கு எதிராகக் குரல் உயர்த்தத் தொடங்கியுள்ளனர். இதனால் நாம் தமிழர் கட்சிக்குள் பெரும் பரபரப்பும் உட்கட்சிப் பூசலும் வெடித்துள்ளன. அவரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்கக் கோரி தருமபுரி மாவட்ட நாதகவினர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குத் தொடர்ந்து அழுத்தமும் நெருக்கடியும் கொடுத்து வருகின்றனர். இந்த விவகாரம் தருமபுரி மண்டல அரசியல் அரங்கில் மட்டுமின்றி, கட்சிக்குள்ளும் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
இந்த அரிமா நாதன் மீது ஏகப்பட்ட பாலியல் புகார் உள்ளது. பல முறை இதை கட்சி பெண் பெறுப்பாளர்கள் சீமானிடம் எடுத்து சொல்லி அவனை கட்சியை விட்டு நீக்க சொன்ன போதும் சீமான் அவனை நீக்கவே இல்லை
இதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கட்சி பொறுப்பாளர்கள் என்னிடம் சொல்லி இதை வெளியே கொண்டு வர… https://t.co/wdAZusa2Jv pic.twitter.com/m5ygtdwTDM— கபிலன் (@_kabilans) July 26, 2026
நிர்வாகிகளின் தொடர் எதிர்ப்புகளுக்குப் பதிலளிக்கும் வகையில் சீமான் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், “நாளை என்னையே கட்சியிலிருந்து விலகச் சொல்வீர்களா? போர்க்கொடி தூக்குபவர்கள் அப்படியே வேறு ஏதாவது கட்சியில் போய் சேர்ந்துவிட வேண்டியதுதானே?” என்று கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், நாம் தமிழர் கட்சியில் தலைமை என்ன சொல்கிறதோ அதன்படிதான் அனைவரும் நடக்க வேண்டும் என்று அவர் கண்டிப்புடன் கூறியிருப்பது நாதக வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
