“ஆகஸ்ட் மாதத்தில் காத்திருக்கும் பெரிய சம்பவம்..!” எடப்பாடி பழனிசாமி எடுத்த அதிரடி முடிவு… வேலுமணி, சி.வி.சண்முகத்திற்கு செக்.. தமிழக அரசியலில் பூகம்பம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஆகஸ்ட் மாதத்தில் காத்திருக்கும் பெரிய சம்பவம்..!” எடப்பாடி பழனிசாமி எடுத்த அதிரடி முடிவு… வேலுமணி, சி.வி.சண்முகத்திற்கு செக்.. தமிழக அரசியலில் பூகம்பம்..!!

Published

on

2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழகம்’ தனது அறிமுகத் தேர்தலிலேயே 108 தொகுதிகளைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துப் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதிமுக தலைமையிலான கூட்டணி 53 தொகுதிகளைக் கைப்பற்றி தோல்வி அடைந்தது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் தொடர்பாக 85 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்தாய்வு மேற்கொண்டு வந்தார். இதில் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்காமல் தவிர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதத்தில் கட்சியின் செயற்குழு கூட்டம் கூட்டப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிமுக செயற்குழு கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. கூட்டத்தை புறக்கணித்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் உட்கட்சி அதிருப்தியாளர்கள் மீது இந்தச் செயற்குழுவில் கட்சி ரீதியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரவலாக எழுந்துள்ளது. மேலும், தேர்தலுக்குப் பிந்தைய உட்கட்சிப் பூசல்கள் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் இந்த யோசனைக் கூட்டத்தில் காரசாரமாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in