“அடக்கடவுளே.. காரில் சடலமாக கிடந்த டாக்டர்..” காயங்கள் இல்லாத உடலில் இருந்த அந்த ஒரு விபரீதம்… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. பரபரப்பு பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடக்கடவுளே.. காரில் சடலமாக கிடந்த டாக்டர்..” காயங்கள் இல்லாத உடலில் இருந்த அந்த ஒரு விபரீதம்… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. பரபரப்பு பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தின் நந்தகிராம் பகுதியிலிருந்து காணாமல் போன 30 வயது மருத்துவர் சிவம் கார்த்திகேயா, ஈஸ்டர்ன் பெரிஃபெரல் எக்ஸ்பிரஸ்வேயில் நிறுத்தப்பட்டிருந்த காரில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜ் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் வசித்துவந்த இவர், கடந்த செப்டம்பர் 29 அன்று காணாமல் போனதாகக் கூறி அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில், எக்ஸ்பிரஸ்வே சாலையில் ‘UK06BL3119’ எண் கொண்ட பிரெஸ்ஸா கார் ஒன்று நீண்ட நேரமாக ஒரே இடத்தில் நின்றுகொண்டிருந்ததால் சந்தேகமடைந்த பொதுமக்கள், போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முராத்நகர் போலீசார் காரைத் திறந்து பார்த்தபோது, உள்ளே மருத்துவர் சிவம் கார்த்திகேயா சடலமாகக் கிடந்துள்ளார். அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லாத நிலையில், கார் எஞ்சினுக்குள் மருந்துப் பொருட்கள் சில கண்டெடுக்கப்பட்டுள்ளன. மருத்துவர் தனக்குத்தானே அதிகப்படியான மருந்தை செலுத்திக் கொண்டதால் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் போலீசார் சந்தேகிக்கின்றனர். எனினும், அவரது மரணத்திற்கான உண்மையான காரணம் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே தெளிவாகத் தெரியும் என்பதால், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in