அடக்கொடுமையே.. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தாய் எடுத்த விபரீத முடிவு… துடிதுடிக்கப் பறிபோன 8 மாதக் குழந்தையின் உயிர்.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

அடக்கொடுமையே.. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தாய் எடுத்த விபரீத முடிவு… துடிதுடிக்கப் பறிபோன 8 மாதக் குழந்தையின் உயிர்.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

தெலுங்கானா மஹபூபாபாத் மாவட்டம் போய்ஜதாண்டா பகுதியைச் சேர்ந்த சுப்ரஜா என்ற பெண், தனது 8 மாதப் பெண் குழந்தையைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி மூன்று ஆண்டுகளான நிலையில், சுப்ரஜா தனது கணவர் பனோத் பன்சிலால் மற்றும் 8 மாதக் குழந்தை த்ரிஷாவுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், தனது அத்தை பாலி என்பவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுப்ரஜா தனது பச்சிளம் குழந்தையைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்ற சுப்ரஜா, அந்த முயற்சி தோல்வியடைந்ததால் கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தைக் குடித்துள்ளார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in