CRIME
“ச்சீ.. ஈவு இரக்கமே இல்லையா..?” 6 அப்பாவி நாய்க்குட்டிகளுக்கு நேர்ந்த பரிதாபம்.. சிறுவர்கள் செய்த கொடூரச் செயல்… வெளியான பகீர் வீடியோ..!!
சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் மனிதநேயத்தைத் தலைகுனிய வைக்கும் வகையில், ஆறு நாய்க்குட்டிகள் பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. அம்பிகாபூர் நகரில் உள்ள பஞ்சாப் கார்டன் பகுதிக்குப் பின்புறம், சிறுவர்கள் சிலர் ஒன்றிணைந்து அங்கிருந்த ஆறு அப்பாவி நாய்க்குட்டிகளை முதலில் ஈவு இரக்கமின்றித் தாக்கியுள்ளனர். அதோடு நில்லாமல், அந்த வாயில்லா ஜீவன்கள் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்து உயிரோடு எரித்த கொடூரம் அரங்கேறியுள்ளது. இந்தப் பதைபதைக்க வைக்கும் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்தே, இந்தக் கொடூரச் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து அறிந்த ‘பெசுபான் நாய்கள் காப்பகம்’ அமைப்பினர், காந்திநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்து, இக்கொடூரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். எவ்விதத் தவறும் செய்யாத அந்தப் பிஞ்சு நாய்க்குட்டிகளுக்கு நேர்ந்த இந்தக் கொடுமை, விலங்குகள் நல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வாயில்லா ஜீவன்களின் பாதுகாப்பும், இன்றைய சமூகத்தின் மனிதநேயமும் எந்த அளவிற்குச் சீரழிந்து வருகிறது என்ற ஆழமான கேள்வியையும் இச்சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது.
