CRIME
அடச்சீ..! அறை முழுவதும் பெண்களின் உள்ளாடைகள்.. மேலே படுத்து உல்லாச உறக்கம்… போலீசாரை அதிரவைத்த டெய்லர்…!!
புதுச்சேரி முதலியார்பேட்டை சிங்கிலி நாயக்கர் தெருவில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டின் அறையில், பெண்களின் பிரா, பாவாடை, ஜட்டி உள்ளிட்ட உள்ளாடைகள் அதிக அளவில் சிதறி கிடந்ததோடு, சுவற்றிலும் தொங்கவிடப்பட்டிருந்தன. அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் துவைத்து கொடிகளில் காயப்போடப்பட்டிருந்த இந்த உள்ளாடைகளை மர்ம நபர் ஒருவன் தொடர்ந்து திருடி வந்துள்ளார். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்.
போலீசாரின் விசாரணையில், பெண்களின் உள்ளாடைகளைத் திருடிய நபர் உடையார்தோட்டம் பகுதியைச் சேர்ந்த வேணு (44) என்பது தெரியவந்தது. தையல் தொழிலாளியான இவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இவருடைய மனைவி இவரைப் பிரிந்து சென்றுவிட்டதும், அதன் பின்னர் இவர் கூலி வேலை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
எப்போதும் மதுபோதையில் இருக்கும் வேணுவுக்கு ஒரு விசித்திரமான பழக்கம் இருந்துள்ளது. வீடுகளில் காயப்போடும் பெண்களின் உள்ளாடைகளைத் திருடிச் சென்று, அந்தப் பாழடைந்த அறையில் அவற்றை மெத்தை போல பரப்பி, அதன் மீது மது மயக்கத்தில் படுத்து உறங்குவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்த விசித்திரச் செயலில் ஈடுபட்ட வேணுவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
