CRIME
உச்சக்கட்ட சோகம்.. பெற்ற தாயின் கண்முன்னே உடன்பிறந்த அண்ணனை கொடூரமாக கொன்ற தம்பி.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், பெற்ற தாயின் கண்முன்னே உடன்பிறந்த அண்ணனைத் தம்பியே அடித்துக் கொலை செய்த நெஞ்சைப் பதற வைக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சகோதரர்கள் இருவருக்கும் இடையே ஏதோ ஒரு விஷயம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அவர்களது சண்டையைத் தாய் தடுத்து நிறுத்துவதற்குள்ளாகவே, ஆத்திரமடைந்த தம்பி அவிரல், அங்கிருந்த அம்மிக்கல் மற்றும் குழவியை எடுத்து தனது அண்ணன் அனிகேத்தைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். அனிகேத்தின் மூச்சு அடங்கும் வரை அவர் தொடர்ந்து தாக்கியதில், தாயின் கண்முன்னே அனிகேத் பரிதாபமாக உயிரிழந்தார்.
தனது வயிற்றில் பிறந்த ஒரு மகனை மற்றொரு மகனே கொலை செய்வதைத் தடுக்க முடியாமல் தவித்த அந்த வயதான தாய், தற்போது இச்சம்பவத்தின் முக்கிய நேரில் கண்ட சாட்சியாக மாறியுள்ளார். கொலையாளியான தம்பி அவிரலைக் காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், இவ்வழக்கின் விசாரணையில் எஞ்சியிருக்கும் தனது ஒரே மகனுக்கு எதிராக அந்தத் தாய் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வேண்டிய இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது. எந்தத் தவறும் செய்யாத அந்தத் தாய்க்கு, ஒரு மகனை இழந்த துயரத்தோடு மற்றொரு மகனையும் சிறைக்கு அனுப்ப வேண்டிய வாழ்நாள் தண்டனை கிடைத்திருப்பது காண்போரின் கண்களைக் குளமாக்கியுள்ளது.
