தீபாவளி பரிசு வந்தாச்சு..! ரேஷன் கார்டுக்கு ₹1,000.. மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தீபாவளி பரிசு வந்தாச்சு..! ரேஷன் கார்டுக்கு ₹1,000.. மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு..!!

Published

on

புதுச்சேரி மாநிலத்தில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பட்டியல் இன (SC) மற்றும் பழங்குடியின (ST) மக்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகளுக்குப் பதிலாக இந்த ஆண்டு தலா ₹1,000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பண்டிகைக் காலத்தில் மக்கள் தங்களுக்குப் பிடித்தமான ஆடைகளைத் தாங்களே தேர்வு செய்து வாங்குவதற்கு ஏதுவாக இந்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசின் இந்த முடிவின்படி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மொத்தம் 47,180 தகுதியான பயனாளிகளின் வங்கித் கணக்குகளில் நேரடியாக இந்தத் தொகை வரவு வைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தை எவ்வித தொய்வுமின்றிச் செயல்படுத்துவதற்காக புதுச்சேரி அரசு தற்பொழுது ₹13.38 கோடி நிதியை உடனடியாக ஒதுக்கி ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisement

இதுமட்டுமின்றி, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் விதமாக ₹700 மதிப்புள்ள தீபாவளி சிறப்புப் பொருட்கள் தொகுப்பு அல்லது அதற்கு இணையான தொகை வழங்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இவற்றுடன் சேர்த்து தற்போது SC, ST மக்களுக்கான சிறப்பு நிதியும் அறிவிக்கப்பட்டுள்ளதால் புதுச்சேரி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in