CRIME
“அவனுக்கும் எனக்கும் தொடர்பே இல்லை…” கோர்ட்டில் பல்டி அடித்த காதலி.. வழக்கறிஞர் அறையிலேயே காதலன் எடுத்த விபரீத முடிவு.. நீதிமன்றத்தில் பரபரப்பு..!!
ஜோத்பூரில் உள்ள ராஜஸ்தான் உயர் நீதிமன்ற வளாகத்தில், ஆட்கொணர்வு மனு விசாரணையின் போது காதலி ஏமாற்றிய அதிர்ச்சியில் 22 வயது வாலிபர் ஒருவர் வழக்கறிஞர் அறையின் பால்கனி கைப்பிடியில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திங்கள்கிழமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பார்மர் சாலை பகுதியைச் சேர்ந்த அர்பாஸ் கான் என்ற அந்த இளைஞர், தனது காதலி அவரது குடும்பத்தினரால் பிணைக் கைதியாக வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். நீதிமன்ற உத்தரவின்படி ஆஜர்படுத்தப்பட்ட அந்தப் பெண், அர்பாஸ் கானுடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், தன் அத்தையுடன் செல்ல விரும்புவதாகவும் நீதிபதிகள் முன்னிலையில் திடீரெனக் கூறி மறுத்தார்.
காதலியின் இந்தத் துரோகப் பேச்சைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அர்பாஸ் கான், நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றபோது, அங்கிருந்த வழக்கறிஞர்கள் அவரைச் சாதுரியமாக மீட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாக அர்பாஸ் கானைக் கைது செய்தனர். இதற்கிடையே, அர்பாஸ் கான் போலியாகத் திருமணச் சான்றிதழ் தயாரித்ததாக அப்பெண்ணின் குடும்பத்தினர் தொடர்ந்த உரிமையியல் வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளதுடன், அதன் அடுத்தகட்ட விசாரணையை 2026 நவம்பர் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
