நெஞ்சைப் பதறவைக்கும் துயரம்! மொட்டை மாடியில் துணி காயப் போட்ட பெண்ணைத் தாக்கிய குரங்கு – அதிர்ச்சியில் சைலண்ட் அட்டாக் ஏற்பட்டு 28 வயது இளம்பெண் பலி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நெஞ்சைப் பதறவைக்கும் துயரம்! மொட்டை மாடியில் துணி காயப் போட்ட பெண்ணைத் தாக்கிய குரங்கு – அதிர்ச்சியில் சைலண்ட் அட்டாக் ஏற்பட்டு 28 வயது இளம்பெண் பலி..!!

Published

on

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் வீட்டின் மொட்டை மாடியில் துணி காயப் போட்டுக் கொண்டிருந்த 28 வயது பெண், குரங்குத் தாக்குதலுக்கு உள்ளாகி மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கன்சுவா பகுதியைச் சேர்ந்த ரேணு பட் என்ற அந்தப் பெண் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மாடிக்குச் சென்றபோது, அங்கு வந்த குரங்குக் கூட்டத்தில் ஒன்று அவர் மீது பாய்ந்து தாக்கியது.

குரங்கை விரட்ட அவர் குச்சியை எடுத்தபோதும், அது அவரது தோள் மீது ஏறி முகம் மற்றும் முதுகில் நகங்களால் பலமாகப் பிறாண்டியுள்ளது. திடீர் தாக்குதலால் கடும் அதிர்ச்சியும் பயமும் அடைந்த ரேணு பட் அங்கேயே மயங்கிச் சரிந்த நிலையில், அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

Advertisement

மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள், குரங்குத் தாக்குதலின் அதிர்ச்சியில் ஏற்பட்ட ‘சைலண்ட் அட்டாக்’ காரணமாக அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். 6 வயது பெண் குழந்தையைக் கொண்ட இவரது உயிரிழப்பு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், குரங்குகளின் அட்டகாசத்தைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in