CRIME
கேட்டாலே நெஞ்சு பதறுது..! EX கணவர் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதியுடன் காதல்… 2 லட்சம் பணத்துக்காக ரயில் பாதையில் குண்டுவைத்த இளம்பெண்..!!
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகர் அருகே உள்ள அனூப்கர்-சூரத்கர் ரயில் பாதையில் கடந்த நவம்பர் 3-ஆம் தேதி நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதல் சதித் திட்டத்தின் முழு பின்னணியைப் போலீசார் அம்பலப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாகப் பஞ்சாபின் குர்தாஸ்பூரைச் சேர்ந்த மகக்தீப் கவுர் என்ற பெண்ணும் அவரது கூட்டாளி தவிந்தர் சிங்கும் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிறையில் உள்ள மகக்தீப்பின் முன்னாள் கணவர் கரண்வீர் சிங் மூலமாக, பாகிஸ்தானில் உள்ள லவ்லி மற்றும் ஷா ஆகிய பயங்கரவாதிகளின் அறிமுகம் அப்பெண்ணிற்குக் கிடைத்துள்ளது.
சமூக வலைதளங்கள் வழியாக ஷாவுடன் ஏற்பட்ட நெருக்கத்தைப் பயன்படுத்தி, அப்பெண்ணை உணர்வுபூர்வமாக மிரட்டிய (Emotional Blackmail) பயங்கரவாதிகள், ரயில் பாதையில் குண்டுவைக்கச் சம்மதிக்க வைத்துள்ளனர். இதற்காக ரூ.2 லட்சத்து 23 ஆயிரம் பணமும் வழங்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் இருமுறை குண்டுவைக்க முயன்று தோல்வியடைந்த நிலையில், மூன்றாவது முயற்சியாக நவம்பர் 3-ஆம் தேதி இரவு 9:45 மணியளவில் 50 ஜி.பி (50 GB) கிராமத்திற்கு அருகே இவர்கள் வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளனர்.
இந்தப் பயங்கர வெடிவிபத்தில் ரயில் தண்டவாளங்களுக்கு இடையே சுமார் 3 அடி ஆழத்திற்குப் பள்ளம் ஏற்பட்டதுடன், தண்டவாள ஸ்லீப்பர்களும் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாகச் சற்று நேரத்திற்கு முன்புதான் அந்த வழியாக ரயில் கடந்து சென்றதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. தற்போது இந்தப் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் பயங்கரவாதத் தொடர்புகள் குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
