ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்..! வங்கி கணக்கில் ரூ.5,160 வரவு…தமிழக அரசு அதிரடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்..! வங்கி கணக்கில் ரூ.5,160 வரவு…தமிழக அரசு அதிரடி..!!

Published

on

புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை, ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கு பதிலாக மார்ச் 2026 முதல் ஆகஸ்ட் 2026 வரையிலான 6 மாத காலத்திற்கான ரொக்க உதவித்தொகையை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைத்துள்ளது. முதலமைச்சர் ரங்கசாமியின் உத்தரவின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த நேரடி பணப் பரிமாற்றத் திட்டத்தின் மூலம், ஒட்டுமொத்தமாக ரூ.122.91 கோடி நிதி தகுதியுள்ள குடும்பங்களின் கணக்குகளுக்கு வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL / AAY / PHH) சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ அரிசிக்கு பதிலாக மாதந்தோறும் ரூ.860 வீதம், 6 மாதங்களுக்கு மொத்தம் ரூ.5,160 வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ள (APL / Non-PHH) மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு 10 கிலோ அரிசிக்கு பதிலாக மாதந்தோறும் ரூ.430 வீதம், 6 மாதங்களுக்கு மொத்தம் ரூ.2,580 உதவித்தொகை கணக்கிடப்பட்டு செலுத்தப்பட்டுள்ளது.

Advertisement

தங்களுக்குரிய அரிசிப் பணம் வங்கிக் கணக்கில் வந்துள்ளதா என்பதைப் பொதுமக்கள் புதுச்சேரி அரசின் Civil Supplies Grant Status Portal என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம். இந்த இணையப் பக்கத்திற்குச் சென்று தங்களின் மாவட்டம் மற்றும் ரேஷன் கார்டு எண்ணைப் பதிவிடுவதன் மூலம் பணப் பரிமாற்றம் குறித்த விரிவான விவரங்களை எளிதாக அறிய முடியும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in