LATEST NEWS
அய்யயோ..! 6 மாதம் ரேஷன் பொருட்கள் வாங்கவில்லையா? நாளை முதல் அனைத்து ரேஷன் அட்டைகளும் ரத்து.. மத்திய அரசின் அதிரடி ஆக்ஷன்
தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முறைகேடுகளைத் தவிர்க்கவும், தரவுகளைச் சீரமைக்கவும் மத்திய அரசு புதிய அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி, நாடு முழுவதும் கடந்த 6 மாதங்களாக ஒருமுறை கூட பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுகளுடன் தொடர்புடைய சுமார் 1 கோடியே 58 லட்சம் பயனாளிகளின் சலுகைகள், அக்டோபர் 1-ஆம் தேதியான முதல் தற்காலிகமாக முடக்கப்படவுள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுகள் நேரடியாக ரத்து செய்யப்படாது என்றும், முதற்கட்டமாகத் தற்காலிகமாக மட்டுமே முடக்கப்படும் என்றும் மத்திய உணவுத்துறை தெளிவுபடுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பயனாளிகள் தங்களது கார்டுகளின் தகுதியை மீண்டும் உறுதி செய்து கொள்வதற்காக 3 மாத கால அவகாசம் வழங்கப்படும். இந்த இடைப்பட்ட காலத்திற்குள் பயனாளிகள் தங்களது இ-கே.ஒய்.சி (e-KYC) நடைமுறையை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும்.
அதன் பிறகு, தேவைப்படும் இடங்களில் அதிகாரிகளால் நேரடி கள ஆய்வுகள் நடத்தப்பட்டு தகுதி உறுதி செய்யப்பட்ட பின்னர், சம்பந்தப்பட்ட ரேஷன் கார்டுகள் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்களின் இறப்பு, இடம் பெயர்வு மற்றும் போலிப் பதிவுகளைக் கண்டறிந்து நீக்கும் இந்தத் தீவிர நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஏற்கனவே 5.8 கோடி போலி ரேஷன் கார்டுகள் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
