LATEST NEWS
குஷியோ குஷி..! இனி ரேஷன் அட்டைகள் நேரடியாக வீடு தேடி வரும்… தமிழக அரசின் மாஸ் அறிவிப்பு…!!
ஓசூரில் உள்ள ரேஷன் கடை மற்றும் கேழ்வரகு கொள்முதல் நிலையத்தை உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஜூலை 7-ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த 73,000 புதிய குடும்ப அட்டைகளில், இதுவரை 20,000 அட்டைகள் தகுதியான பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், ரேஷன் கார்டு விநியோக முறையில் புதிய மாற்றத்தைக் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, இனிவரும் காலங்களில் பொதுமக்கள் புதிய ரேஷன் கார்டுகளைப் பெற அலைவதைத் தவிர்க்கும் வகையில், அவை நேரடியாக அஞ்சல் துறை (Post Office) மூலமாகவே மக்களின் வீடுகளுக்கே அனுப்பி வைக்கப்படும் என்றும் அமைச்சர் வெங்கடரமணன் உறுதி அளித்தார்.
