LATEST NEWS
“அச்சோ பாவம்.. ஏழை முதியவரிடம் அராஜகம் செய்த காக்கிகள்..” மௌனமாய் அழுத ஏழை தாத்தா.. நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்த வீடியோ..!!
சாலையோரத்தில் வறுமையின் காரணமாகத் தண்ணீர் பாட்டில்கள் விற்றுக்கொண்டிருந்த முதியவரிடம், இரண்டு போலீசார் தலா 20 ரூபாய் மதிப்புள்ள 5 தண்ணீர் பாட்டில்களை வாங்கிக்கொண்டு ஒரு பைசா கூட தராமல் ஏமாற்றிச் சென்ற சம்பவம் மனிதநேயமற்ற செயலாகப் பார்க்கப்படுகிறது. தங்களால் முடிந்த உதவிகளை ஏழைகளுக்குச் செய்யாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் கஷ்டப்பட்டு உழைக்கும் அந்த ஏழை முதியவரின் உழைப்பைச் சுரண்டிச் சென்றது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய காவலர்களே தங்களின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, ஏழை வியாபாரியிடம் இப்படி அராஜகம் செய்தது அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சமாகும்.
அந்தப் ஏழை முதியவரால் அதிகார பலம் கொண்ட போலீசாரை எதிர்த்து அந்த நேரத்தில் எதுவும் செய்ய முடியாமல் போனதுதான் இதில் உள்ள மிகப்பெரிய அவல நிலை. அவர் ஏதேனும் எதிர்த்துக் கேள்வி கேட்டிருந்தால், அடுத்த நாள் முதல் அந்த இடத்தில் அவரைச் சிறிய கடையைக் கூட வைக்க விடாமல் இந்த போலீசாரே விரட்டியடித்திருப்பார்கள் என்ற பயம்தான் அவரை மௌனமாக்கியுள்ளது. நாளுக்கு நாள் மனிதநேயம் என்பது கீழ்நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் இந்தச் சமூகத்தில், இதுபோன்ற எளிய மனிதர்களின் உழைப்பைச் சுரண்டும் அதிகார வர்க்கத்தின் மீதான புகார்கள் ஆன்லைன் மூலமாகவாவது உயர் அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்று தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
