LATEST NEWS
திரிஷா முன்னாடி போக பின்னாடி விஜய் போறாரு… சுதந்திர போராட்ட வீரர்கள் மட்டும் இருந்திருந்தால்.. ஆர்.பி. உதயகுமாரின் ஒருமை பேச்சு..!!
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோரைக் குறிப்பிட்டுப் பேசிய கருத்துக்கள் தமிழக அரசியலிலும் சமூக வலைத்தளங்களிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. தேனியில் நடைபெற்ற கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், முதலமைச்சரின் செயல்பாடுகள் மற்றும் அவரது அண்மைய லண்டன் பயணம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
ஆர்.பி. உதயகுமார் தனது பேச்சில், சுதந்திர தின விழாவின் போது மேடையில் த்ரிஷாவை அமர வைத்துவிட்டு முதலமைச்சர் விஜய் சல்யூட் அடித்ததாகக் குறிப்பிட்டார். “இன்றைக்கு நம்முடைய சுதந்திர போராட்ட வீரர்கள் உயிரோடு இருந்திருந்தால், இதற்காகவா நாம் ரத்தம் சிந்தி சுதந்திரம் வாங்கிக் கொடுத்தோம் என்று வேதனையுடன் கேட்டிருப்பார்கள்” என்று சாடினார். மேலும், முதலமைச்சரின் லண்டன் பயணத்தைக் குறிப்பிட்டு, அங்கு த்ரிஷா முன்னால் செல்ல விஜய் அவருக்குப் பின்னால் செல்கிறார் என்று ஒருமையில் விமர்சித்தார்.
முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா குறித்து ஆர்.பி. உதயகுமார் அநாகரிகமான முறையில் பேசியதாகக் கூறி தமிழக வெற்றிக் கழகத்தினர் மற்றும் த்ரிஷாவின் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பெண்களை இழிவுபடுத்தும் விதமாகவும், தரம் தாழ்ந்த அரசியல் நோக்கத்திற்காகவும் இத்தகைய தனிநபர் விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாகக் கூறி, ஆர்.பி. உதயகுமாருக்கு எதிராகப் பல்வேறு மாவட்டங்களில் காவல் துறையில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.
