LATEST NEWS
“மேட்ரிமோனியலில் காதல்… கோவிலில் திருமணம்… கடைசியில் ராணுவ வீரன் சொன்ன அந்த ஒரு வார்த்தை! பதறிப்போன மனைவி..!!”
காசியாபாத்தைச் சேர்ந்த உஷா என்ற பெண்ணிற்கு, ‘ஜீவன்சாதி’ என்ற மேட்ரிமோனியல் ஆப் மூலம் பாக்பத் மாவட்டத்தின் லூஹாரி கிராமத்தைச் சேர்ந்த சூரஜ் குமார் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. நாளடைவில் இவர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தை காதலாக மாறியது. தான் ராணுவத்தில் பணியாற்றுவதாகவும், லடாக்கில் தனக்கு வேலை என்றும் சூரஜ் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, கடந்த 2026 ஜூலை 23 அன்று டெல்லியில் உள்ள தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள ஆர்ய சமாஜ் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்குப் பிறகு சில நாட்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்த நிலையில், பணிக்குத் திரும்ப வேண்டும் எனக் கூறி சூரஜ் அங்குிருந்து சென்றுவிட்டார். விடுமுறை கிடைக்கும்போது மீண்டும் வருவதாக அவர் உறுதியளித்த போதிலும், நீண்ட நாட்களாக அவர் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த உஷா, தனது கணவரைத் தேடி பாக்பத்தில் உள்ள அவரது லூஹாரி கிராமத்திற்கே நேரில் சென்றார். ஆனால் அங்குச் சென்றதும், சூரஜ் அவரை மனைவியாக தன்னுடன் சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டார். மேலும், அவரை கெட்ட வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
கணவரின் இந்த செயலால் அதிர்ச்சியடைந்த உஷா, பாக்பத் ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று மாவட்ட ஆட்சியர் அஸ்மிதா லால் அவர்களிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், தான் தன் கணவருடன் வாழ விரும்புவதாகவும், அவர் மறுக்கும் பட்சத்தில் இந்த விவகாரத்தில் சட்டப்படி நியாயமான நடவடிக்கை எடுத்து, தனக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். தற்போது இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை; திருமண ஆவணங்கள், இருவருக்குமிடையே நடந்த உரையாடல்கள் மற்றும் ராணுவத்தில் சூரஜ் பணியாற்றுவதாகக் கூறியது உண்மையா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
