CRIME
பட்டப்பகலில் பயங்கரம்.. பெண்ணைக் கீழே தள்ளி நகையை அறுத்த கருப்பு பல்சர் கொள்ளையர்கள்.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மைன்புரி நகர கோத்வாலி காவல் எல்லைக்குட்பட்ட அவாஸ் விகாஸ் காலனி பகுதியில், ரேணு தோமர் என்ற பெண் தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் சங்கிலி பறிப்புக்குள்ளான அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. கருப்பு நிற பல்சர் மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று இளைஞர்கள், திடீரென ரேணுவின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பியோடியுள்ளனர். சங்கிலியைப் பறிகொடுத்த ரேணு, துணிச்சலுடன் அந்த மர்ம நபர்களைப் பிடிக்க முயன்றபோது நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்து காயமடைந்தார்.
பட்டப்பகலில் குடியிருப்புப் பகுதியில் அரங்கேறிய இந்த அதிர்ச்சியூட்டும் சங்கிலிப் பறிப்புச் சம்பவம், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் முழுமையாகப் பதிவாகியுள்ளது. தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள கோத்வாலி போலீசார் அந்த மூன்று மர்ம கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
