LATEST NEWS
அடக்கடவுளே..! “தம்பி டிவியை ஆஃப் செய்ததால் ஆத்திரம்…” தந்தையின் ஒரு செயலால் பரிதாபமாக பலியான 17 வயது சிறுமி..! நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!
மகாராஷ்டிரா மாநிலத்தின் சாத்தாராவில், டிவியை அணைப்பது தொடர்பான குடும்ப தகராறில் 17 வயது சிறுமி உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சனிக்கிழமை நள்ளிரவு சுமார் 12:30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் சிறுமி டிவி பார்த்துக்கொண்டிருந்தபோது, அவளது தம்பி டிவியை அணைத்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த சிறுமி தம்பியை தாக்கிய நிலையில், தந்தை இடையூறு செய்து இருவருக்கும் இடையே தகராறு முற்றியது.
சம்பவத்தின் போது சிறுமி கத்தியையும், கிரிக்கெட் பேட்டையும் கையில் எடுத்த நிலையில், தந்தை அவரிடமிருந்து பேட்டைப் பறிக்க முயன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிறுமியின் தலையில் கிரிக்கெட் பேட் பலமாகத் தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
சம்பவத்திற்குப் பிறகு, சிறுமியின் மரணத்தை தற்கொலை என சித்தரிக்க முயற்சி நடந்ததாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். அவசர அழைப்பு 112 மூலம் தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றினர். மேலும், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கிரிக்கெட் பேட் மற்றும் கத்தியைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், சிறுமியின் தந்தையைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
