ச்சே..! மனிதாபிமானமே செத்துப்போச்சா..? விபத்தில் உயிருக்குப் போராடியவரிடம் கைவரிசை காட்டிய ஆசாமி..! ஆட்டோவில் வைத்து அரங்கேறிய பகீர் திருட்டு..!! – cinefeeds
Connect with us

CRIME

ச்சே..! மனிதாபிமானமே செத்துப்போச்சா..? விபத்தில் உயிருக்குப் போராடியவரிடம் கைவரிசை காட்டிய ஆசாமி..! ஆட்டோவில் வைத்து அரங்கேறிய பகீர் திருட்டு..!!

Published

on

கேரள மாநிலம் ஆலப்புழாவில் மனிதநேயத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சாலை விபத்தில் காயமடைந்த இருசக்கர வாகன ஓட்டி ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவி செய்வது போல் நடித்த நபர் ஒருவர், வழியிலேயே அவரிடமிருந்த தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்றுள்ளார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் ஆலப்புழா மருத்துவக் கல்லூரி வளாகத்திற்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்துள்ளது. விபத்தில் சிக்கியவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வந்த ஆட்டோவில் ஏறிய குற்றவாளி, அவரைப் பராமரிப்பது போல் நடித்து கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைத் திருடியுள்ளார். மருத்துவமனையை அடைந்ததும் சங்கிலியுடன் தப்பி ஓடிய அந்த நபர் குறித்து, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் ஆலப்புழா காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

Advertisement

புகாரின் பேரில் விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர், மருத்துவக் கல்லூரி வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் உட்பட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதன் மூலம் அடையாளம் காணப்பட்ட குற்றவாளி, குறவந்தோடு சந்திப்பில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபர் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ள நிலையில், அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in