CRIME
“ச்சீ.. இவனெல்லாம் தந்தையா..?” தாயின் மடியில் தூங்கிய 2 வயதுக் குழந்தை.. மதுபோதையில் தந்தை செய்த கொடூரச் செயல்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பரிதோஷ் மண்டல் (27) மற்றும் அவரது மனைவி ரோண்ட் வாலி ஆகியோர், தங்களது 2 வயது மகள் தீபிகாவுடன் கேரள மாநிலம் மாவேலிக்கரை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணியளவில் பரிதோஷ் மண்டல் அளவுக்கு அதிகமான மதுபோதையில் நிதானமின்றி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தாயின் மடியில் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த 2 வயதுக் குழந்தை தீபிகாவை, பரிதோஷ் திடீரெனத் தூக்கி ஓங்கித் தரையில் அடித்துள்ளார். தந்தையின் இந்தக் கொடூரச் செயலால் அலறியடித்த குழந்தை, பலத்த காயமடைந்து உடனடியாக மயக்க நிலைக்குச் சென்றது.
இதனைச் சற்றும் எதிர்பார்க்காத தாய் ரோண்ட் வாலி, கதறித் துடித்தபடியே மயங்கிய நிலையிலிருந்த குழந்தையை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால், குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மேலும், குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கருதிய மருத்துவர்கள், உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், தந்தையே மதுபோதையில் குழந்தையைத் தரையில் அடித்துக் கொன்ற அதிர்ச்சி உண்மை அம்பலமானது. இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், பரிதோஷ் மண்டலை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற தந்தையே 2 வயதுப் பெண் குழந்தையை மதுபோதையில் கொலை செய்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
