LATEST NEWS
“திக் திக் திக்..” திடீரென வெடித்துச் சிதறிய டிரான்ஸ்பார்மர்… தீப்பிழம்புகளுக்கு நடுவே சிக்கிய பாதசாரி.. அமேசான் ஆபீஸ் வெளியே நேர்ந்த கொடூரம்.. வைரலாகும் திகில் வீடியோ..!!
பெங்களூரு வடகிழக்கு பகுதியின் பஹலூர் கிராஸ் அருகே உள்ள அமேசான் அலுவலகத்திற்கு வெளியே, புதன்கிழமை காலை 9:49 மணியளவில் திடீரென மின்மாற்றி வெடித்து சிதறியதில் அங்கு நடந்து சென்ற பாதசாரி ஒருவர் படுகாயமடைந்தார். எலஹங்கா பழைய டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அமேசான் வளாகத்தின் 3-வது நுழைவாயில் அருகே இந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த நபர் முகமது அஃப்ரோஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் இருந்த அருண் ஜி என்பவரின் காரில் பொருத்தப்பட்டிருந்த டேஷ்கேமரா மூலம் இந்த அதிர்ச்சியூட்டும் வெடிப்புச் சம்பவம் முழுமையாகப் பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் குறித்துத் தகவல் தெரிவித்த வடகிழக்கு மண்டலக் காவல் துணை ஆணையர் மிதுன் குமார், காயமடைந்த முகமது அஃப்ரோஸ் தற்போது மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், அவர் பாதுகாப்பாக உள்ளார் என்றும் உறுதிப்படுத்தியுள்ளார். விபத்து நடந்த சமயம் அங்கு பெரும் கூட்டம் கூடியதாலும், காரில் குழந்தைகள் இருந்ததாலும் காரை விட்டு இறங்க முடியவில்லை என இந்த விபத்தை நேரில் பார்த்த சாட்சியான அருண் தெரிவித்துள்ளார். இந்தத் திடீர் மின் கோளாறு மற்றும் வெடிப்பு குறித்துப் போலீசார் மற்றும் மின்சாரத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
