“மன்னிப்பு கேளுங்கள் அமித் ஷா..” அஜித் பவார் சிலை திறப்பால் வெடித்த புதிய சர்ச்சை.. ரூ.70,000 கோடி ஊழல் புகாரைச் சுட்டிக்காட்டி உத்தவ் தாக்கரே ஆவேசம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“மன்னிப்பு கேளுங்கள் அமித் ஷா..” அஜித் பவார் சிலை திறப்பால் வெடித்த புதிய சர்ச்சை.. ரூ.70,000 கோடி ஊழல் புகாரைச் சுட்டிக்காட்டி உத்தவ் தாக்கரே ஆவேசம்..!!

Published

on

மஹாராஷ்ட்ரா மாநிலம், புனேவில் உள்ள அரசு அலுவலகத்தில் முன்னாள் துணை முதல்வர் அஜித் பவாரின் சிலையை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார். அப்போது, அமித்ஷா பேசுகையில், ”அஜித் பவார் கடந்த ஜனவரி மாதம் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தது மகாராஷ்டிராவிற்கு  ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது பணி எதிர் வரும் அரசியல் தலைவர்களுக்குச் சிறந்த பாடமாக அமையும்”  என்று குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில், சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே இதற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ”அஜித் பவார் உயிரோடிருக்கும் போது அவர் மீது ரூ. 70,000 கோடி ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்திய பாஜக, இப்போது அவரது சிலையைத் திறந்து வைப்பது துரதிர்ஷ்டமானது. சிலையைத் திறந்து வைக்கும்போது, அஜித் பவார் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என ஒப்புக்கொண்டு அமித் ஷா மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்” என்று கடுமையாக சாடினார்.

Advertisement

தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்த அஜித் பவார் மீது பாஜக ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தது. இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற அஜித் பவார், பாஜக கூட்டணியுடன் இணைந்து சட்டமன்ற தேர்தலைச் சந்தித்தார். இதில், வெற்றி பெற்று அவர் மஹாராஷ்ட்ராவின் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றார். இருப்பினும், கடந்த ஜனவரி மாதத்தில் எதிர்பாராத விமான விபத்தில் அவர் உயிர் இழந்தார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதனிடையே, அவரது குடும்பத்தாரும் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அதனால் இது குறித்து விசாரணை நடத்தப்பட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.  இந்நிலையில், பாஜக அமைச்சர் அஜித் பவாரின் சிலையைத் திறந்து வைத்ததற்கு எதிர்க் கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.  

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in