நெஞ்சே பதறுது..! திடீரென மேலிருந்து பாய்ந்த எமன்.. ஓடும் காரை அப்பளமாக நொறுக்கிய ராட்சத பாறை..! உறவினரைப் பார்க்கச் சென்ற இடத்தில் நேர்ந்த கொடூர விபத்து..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நெஞ்சே பதறுது..! திடீரென மேலிருந்து பாய்ந்த எமன்.. ஓடும் காரை அப்பளமாக நொறுக்கிய ராட்சத பாறை..! உறவினரைப் பார்க்கச் சென்ற இடத்தில் நேர்ந்த கொடூர விபத்து..!!

Published

on

கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக சூறாவளி காற்றுடன் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம் கல்லாறு- குன்னூர் இடையே மலைப்பாதையில் பல இடங்களில் மண் சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் செல்லும் வாகனங்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்து சென்று வருகின்றன. நேற்று இரவு பெய்த கன மழையில் மேட்டுப்பாளையம்- குன்னூர் மலைப்பாதையில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவு அருகே ராட்சத மரம் ஒன்று வேருடன் முறிந்து விழுந்தது. இதனால் வாகனங்கள் இருபுறத்திலும் நீண்ட வரிசையில் அணி வகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார், நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலையின் நடுவே விழுந்து கிடந்த மரத்தை அப்புறப்படுத்தினர். இதனால் மேட்டுப்பாளையம் – குன்னூர் மலைப்பாதையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்தநிலையில் இன்று காலை குன்னூர்–மேட்டுப்பாளையம் மலைப்பாதையில், பர்லியாருக்கு கீழ் பகுதியில் மலையில் இருந்து உருண்டு வந்த ராட்சத பாறை சாலையில் சென்ற கார் மீது விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் முதியவர் ஒருவர் பலியானார். குன்னூர் அருகே உள்ள அருவங்காடு ஜெகதலா பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி தேவகி (54). இவர்களது மகன் கார்த்தி (29). இவர்கள் கோவையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட தங்கள் உறவினரை பார்த்து நலம் விசாரிப்பதற்காக இன்று காலை காரில் புறப்பட்டனர். இவர்களுடன் அந்த பகுதியைச் சேர்ந்த இந்திரா (68), சிந்தாமணி (62) ஆகியோரும் பயணம் செய்தனர்.

Advertisement

காரை கார்த்தி ஓட்டி வந்தார். மலையில் இருந்து உருண்டு வந்த ராட்சத பாறை, காரின் பின் பகுதியில் விழுந்து அமுக்கியது. இதில் கார் பலத்த சேதம் அடைந்தது. காரின் பின்னால் இருந்த கிருஷ்ணமூர்த்தியும், அவரது மனைவி தேவகியும் பலத்த காயம் அடைந்தனர். மற்ற 3 பேரும் லேசான காயம் அடைந்தனர். கிருஷ்ணமூர்த்தியும், தேவகியும் மீட்கப்பட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக இறந்தார். தேவகி, மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in