LATEST NEWS
அய்யோ காப்பாத்துங்க… அலறியடித்து ஓடிய மக்கள்.. ஒரே நாளில் 80 உயிர்களைப் பலிவாங்கிய இயற்கைச் சீற்றம்… பதறவைக்கும் பின்னணி..!!
இந்தியாவில் வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலப்பகுதிக்குள் நகர்ந்ததால் மழை தீவிரமடைந்தது. இதன் காரணமாக உத்தர பிரதேசத்தில் கடந்த 25 முதல் 27-ஆம் தேதி வரை கனமழை பெய்தது. இதற்கிடையே உத்தராகண்ட் மாநிலத்தில் பெய்த பலத்த மழையைத் தொடர்ந்து, கேதார்நாத் யாத்திரை வழித்தடமான சிர்பாசா பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.
நிலச்சரிவால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆங்காங்கே சிக்கித் தவித்த நிலையில், பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாகச் செயல்பட்டு பாறைகள் மற்றும் மணல் கழிவுகளை அப்புறப்படுத்தினர். நேற்று சுமார் 1,500 பக்தர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக கவுரிகுண்டுவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நிலச்சரிவு காரணமாக கேதார்நாத் யாத்திரை 2-வது நாளாக நிறுத்தப்பட்டதுடன், உத்தரகாசி மாவட்டத்தில் மலையேற்றம் சென்ற 29 வீரர்களும் மீட்புப் படையினரால் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கப்பட்டனர்.
இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இந்தியாவில் இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர், 46 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. அதேபோல நேபாளத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு 24 பேர் பலியாகியுள்ளனர்; 14 பேரைக் காணவில்லை. மேலும், நேபாளத்தின் மஸ்தங் மாவட்டத்தில் உள்ள காளி கண்டகி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 747 குடும்பங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன.
