“அய்யோ எல்லாமே போச்சே..” அசுரவேகத்தில் வந்த ரயில்.. தண்டவாளத்தில் சிதறிக்கிடந்த உடல்களைப் பார்த்துக் கதறிய மேய்ப்பவர்கள்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அய்யோ எல்லாமே போச்சே..” அசுரவேகத்தில் வந்த ரயில்.. தண்டவாளத்தில் சிதறிக்கிடந்த உடல்களைப் பார்த்துக் கதறிய மேய்ப்பவர்கள்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!

Published

on

தெலங்கானா மாநிலம் யாதாத்ரி புவனகிரி மாவட்டம், பிபிநகர் மண்டலத்திற்குட்பட்ட கொண்டமடுகுமெட்டா பகுதியில், தண்டவாளத்தைக் கடக்க முயன்ற ஆட்டு மந்தையின் மீது இரயில் மோதிய விபத்தில் சுமார் 100 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. சம்பவத்தன்று அப்பகுதியைச் சேர்ந்த ஆடு மேய்ப்பவர்கள் தங்களது ஆடுகளை வழக்கம் போல் மேய்ச்சலுக்குக் கூட்டிச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஆடுகள் அனைத்தும் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, அந்த வழியாக அதிவேகமாக வந்த இரயில் ஆட்டு மந்தையின் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இந்த அதிர்ச்சி விபத்தில் இரயிலின் இரும்புச் சக்கரங்களில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பலியாயின.

தாங்கள் வாழ்வாதாரமாக நம்பி வளர்த்து வந்த அனைத்து ஆடுகளும் கண் இமைக்கும் நேரத்தில் ஒட்டுமொத்தமாக உயிரிழந்ததைக் கண்டு, ஆடு மேய்ப்பவர்கள் தங்களது இழப்பைத் தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இந்த கோர விபத்து குறித்துத் தகவலறிந்து வந்த இரயில்வே போலீசார் மற்றும் உள்ளூர் அதிகாரிகள், சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து விபத்துக்குள்ளான இரயில் எது என்பது குறித்தும், விபத்து நிகழ்ந்ததற்கான முழுமையான பின்னணி குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in