LATEST NEWS
“நள்ளிரவில் பயங்கரம்.. விடிய விடிய கொட்டிய மழை.. சீறிப்பாய்ந்த நிலச்சரிவு…” அலறியடித்த மக்கள்.. இணையத்தில் வைரலாகும் பகீர் காட்சிகள்..!!
வங்காளதேசம் சிக்கிம் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, மேற்கு சிக்கிமின் யுக்சோம்-தாஷிடிங் தொகுதிக்கு உட்பட்ட ரிம்பி கிராமத்தில் நேற்று இரவு கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த இயற்கை பேரிடரால் அந்தப் பகுதியில் உள்ள வீடுகள், சாலைகள் மற்றும் பொதுச் சொத்துக்களுக்குப் பெருமளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
நல்வாய்ப்பாக, இந்த பயங்கர நிலச்சரிவில் சிக்கி இதுவரை எந்தவொரு உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட ரிம்பி கிராமத்தில் உள்ளூர் நிர்வாகத்தினரும் மீட்புக் குழுவினரும் இணைந்து இடிபாடுகளை அகற்றும் பணிகளையும், பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குத் தங்க வைக்கும் பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்
