“நிஜமான தெய்வம் சார் நீங்க…” ஓடும் ரயிலில் சிக்கி 100 மீட்டர் இழுத்துச் செல்லப்பட்ட முதியவர்… உயிரைப் பணையம் வைத்துக் காப்பாற்றிய RPF காவலர்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நிஜமான தெய்வம் சார் நீங்க…” ஓடும் ரயிலில் சிக்கி 100 மீட்டர் இழுத்துச் செல்லப்பட்ட முதியவர்… உயிரைப் பணையம் வைத்துக் காப்பாற்றிய RPF காவலர்..!!

Published

on

சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற முதியவர் ஒருவர் நிலைதடுமாறி, ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையேயான குறுகிய இடைவெளியில் சிக்கிய பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி சமூக ஊடகங்களில் தீவிரமாக வைரலாகி வருகிறது. விழுப்புரம் – சென்னை கடற்கரை நோக்கிச் சென்ற மின்சார ரயிலில் ஏற முயன்றபோது 69 வயதான முகமது அலியார் (முகமது எலியாஸ்) என்ற அந்த முதியவர் இந்த விபத்தில் சிக்கியுள்ளார்.

ரயில் நகரத் தொடங்கிய நேரத்தில் அவர் இடறி விழுந்ததால், ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கி சுமார் 50 முதல் 100 மீட்டர் தூரம் வரை கொடூரமாக இழுத்துச் செல்லப்பட்டார். அப்போது நடைமேடையில் நடந்து வந்த பயணி ஒருவர், முதியவர் ஆபத்தில் இருப்பதை உணர்ந்து உடனடியாக ஓடிச் சென்று அவரை மீட்கத் தீவிரமாக முயன்றார். ஆனால் ரயிலின் வேகம் மற்றும் முதியவர் சிக்கியிருந்த விதம் காரணமாக அந்தப் பயணியால் அவரைத் தனியாக வெளியே இழுக்க முடியவில்லை.

Advertisement

அதே நேரத்தில், அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மாம்பலம் இரயில்வே பாதுகாப்புப் படை (RPF) காவலர் நாராயண் சிங் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து மின்னல் வேகத்தில் ஓடி வந்தார். அவர் உடனடியாக இரயில்வே ஊழியர்களை எச்சரித்து ரயிலை நிறுத்தச் செய்ததுடன், அங்கிருந்த பொதுமக்களின் உதவியோடு ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே சிக்கியிருந்த முதியவரைப் பத்திரமாக வெளியே இழுத்து மீட்டுக் காப்பாற்றினார். இந்த விபத்தில் முதியவருக்குக் காலில் மட்டும் ரத்தக்காயம் ஏற்பட்ட நிலையில், அவருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவச் சிகிச்சை வழங்கப்பட்டது. திக் திக் நிமிடங்களில் துரிதமாகச் செயல்பட்டு முதியவரின் உயிரைக் காப்பாற்றிய ஆர்.பி.எஃப் காவலருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in