LATEST NEWS
“பிப்ரவரியில் ஆர்டர்.. மார்ச்சில் ரூ.1.74 கோடி ரிலீஸ்..” புத்தக ஊழல் FIR-ல் வெளியான பகீர் தகவல்கள்..!!
போலி புத்தக கொள்முதல் தொடர்பாக 11 பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், மோகன் என்பவரே அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் ஆகிய இரண்டு பதிப்பகங்களின் உரிமையாளராக இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் சேர்த்து மொத்தம் 1,857 புத்தகங்களுக்குக் கடந்த பிப்ரவரி மாதம் கொள்முதல் ஆணை வழங்கப்பட்டது. அதையடுத்து, மார்ச் மாதத்தில் இதற்காக ரூ.1.74 கோடி பணம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
