LATEST NEWS
மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சுற ஆள் நாங்க இல்லை… சட்டமன்றத்தில் குரல் கொடுத்ததற்காக வந்த சோதனையா இது..? கே.என்.நேருவின் அதிரடி பேட்டி..!!
லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என். நேரு, சட்டமன்றத்தில் தாம் அடிக்கடி ஆளுங்கட்சியை எதிர்த்து கேள்விகள் கேட்பதால் தான் இந்த ரெய்டு நடத்தப்படுகிறதா என்று நிருபர்களாகிய நீங்களே கேட்பது எனக்கு பெருமையாகத் தான் இருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அப்படி இருக்கவும் வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் ரீதியாகப் பார்த்தால், தங்களை மிரட்டி வைப்பதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சியாகவே இது இருக்கலாம் என்று சுட்டிக்காட்டிய அவர், இருப்பினும் இந்த ரெய்டுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவது தங்களது கடமை என்பதால், தாங்கள் அதற்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக உறுதியளித்துப் பேசியுள்ளார்.
