LATEST NEWS
காலையிலேயே பரபரப்பு…! திமுக எம்.பி. அண்ணாதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு.. திமுகவினருக்கு அடுத்தடுத்து ஷாக்..!
திருவண்ணாமலை தொகுதி திமுக மக்களவை உறுப்பினர் சி.என்.அண்ணாதுரையின் இல்லம் மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று தீவிரச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து இந்த அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்களவை உறுப்பினர் சி.என்.அண்ணாதுரையின் வீட்டில் அதிகாலை முதலே தொடங்கி நடைபெற்று வரும் இந்த லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த சில தினங்களாக திமுகவின் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களின் இடங்களில் தொடர் சோதனைகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த நடவடிக்கை அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது
