தனியார் பள்ளி மோசடி..! முக்கியக் குற்றவாளியின் உறவினர் வீடுகளில் போலீஸ் ரெய்டு.. தமிழக அரசு அதிரடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தனியார் பள்ளி மோசடி..! முக்கியக் குற்றவாளியின் உறவினர் வீடுகளில் போலீஸ் ரெய்டு.. தமிழக அரசு அதிரடி..!!

Published

on

அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி தனியார் பள்ளிகளிடம் பண மோசடி செய்த வழக்கில், முக்கிய குற்றவாளியான முத்துக்குமார் என்பவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர் தலைமறைவாக உள்ளதால், அவரது உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களின் வீடுகளைக் குறிவைத்து போலீசார் தங்களது அடுத்தகட்ட நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக, கள்ளக்குறிச்சி உட்பட 4 முக்கிய இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின் போது, வழக்கிற்குத் தேவையான முக்கிய வங்கி ஆவணங்கள், சொத்து ஆவணங்கள் மற்றும் டைரிகள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Advertisement

இவ்வழக்கில் ஏற்கனவே அரசகுமார், சுரேஷ் மற்றும் ராஜா ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், தலைமறைவாக உள்ள முத்துக்குமார் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த மற்ற நபர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in