அன்பில் மகேஸுக்கு நெருக்கடி… எந்த நேரத்திலும் கைது..? நெருங்கிய வட்டாரங்களில் CCB அதிரடி வேட்டை.. அதிர்ச்சியில் அலறும் திமுக..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அன்பில் மகேஸுக்கு நெருக்கடி… எந்த நேரத்திலும் கைது..? நெருங்கிய வட்டாரங்களில் CCB அதிரடி வேட்டை.. அதிர்ச்சியில் அலறும் திமுக..!!

Published

on

தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 100 கோடி ரூபாய்க்கும் மேல் நிதி மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் தங்களது விசாரணை வளையத்தை தீவிரமாக இறுக்கி வருகின்றனர். இவ்வழக்கில் அன்பில் மகேஸ் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் மற்றும் காவல் துறை வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.

இந்த மெகா மோசடி வழக்கில் தொடர்புடைய திமுக பிரமுகர் அரசகுமார் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியும் அன்பில் மகேஸுக்கு மிகவும் நெருக்கமானவருமான முத்துக்குமார் என்பவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 4 இடங்களில் நேற்று நடைபெற்ற இந்த சோதனையில் முக்கிய வங்கி கணக்குகள் உட்பட 30 அதிமுக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றி உள்ளதாக CCB தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

கைப்பற்றப்பட்ட இந்த ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சான்றுகளின் அடிப்படையில், தலைமறைவாக உள்ள முத்துக்குமாரை பிடிப்பதற்கும், மோசடி பணப் பரிவர்த்தனைகளில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு உள்ள நேரடித் தொடர்புகளை நிரூபிப்பதற்கும் போலீசார் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர். முத்துக்குமாரின் நெருங்கிய வட்டாரங்களில் சிக்கிய இந்த 30 ஆவணங்களால், இவ்வழக்கில் அன்பில் மகேஸுக்கு சட்டப்படியான பிடி மேலும் இறுகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in