LATEST NEWS
“ஸ்டாலினுக்கு அரசியல் தெரியாதுன்னு சொன்னதே அவர்தான்…” நேருவின் பழைய பேச்சுக்களை தோண்டித் துருவி பதிலடி கொடுத்த துரை வைகோ.!!
கே.என். நேருவின் விமர்சனத்திற்கு மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ பதிலடி கொடுத்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், மு.க. ஸ்டாலினுக்கு அரசியல் தெரியாது என்று கூறியவர் கே.என். நேருதான் என்றும், கருணாநிதியின் காலத்துடன் திமுக முடிந்துவிட்டது என அவர் பேசியதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தோல்வியடைய நேருவே முக்கியக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
முன்னதாக, துரை வைகோ திமுகவில் இணைய விருப்பம் தெரிவித்திருந்தார் என்று கே.என். நேரு பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே, திருச்சி பேட்டியில் நேருவின் பழைய பேச்சுக்களை சுட்டிக்காட்டி துரை வைகோ தீவிரமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
