LATEST NEWS
“இது யார் தூண்டுதல்னு தெரியும்… காலம் வரும்போது வட்டியும் முதலுமா கொடுப்பேன்..!” திருச்சியில் 8 மணி நேர சோதனைக்கு பின் அன்பில் மகேஸ் ஆவேசம்..!!
திருச்சியில் உள்ள அமைச்சர் அன்பில் மகேஸின் வீட்டில் காலை முதல் சுமார் 8 மணி நேரமாக மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இச்சோதனை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், தனது வீட்டில் நடைபெற்ற இந்தச் சோதனைக்கு பின்னால் யார் இருக்கிறார்கள், யாருடைய தூண்டுதலால் இது நடக்கிறது என்பதெல்லாம் தனக்கு நன்றாகவே தெரியும் என்று கூறினார். மேலும், இதுபோன்ற எந்தவொரு சலசலப்புக்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம் என்றும், காலம் வரும்போது சம்பந்தப்பட்ட அத்தனை பேருக்கும் வட்டியும் முதலுமாகச் சேர்த்துத் திருப்பித் தருவேன் என்றும் உறுதியாகத் தெரிவித்தார்.
