26 கத்திக்குத்துகள்… கொலை நடந்த இரவில் மகனுக்கு வந்த 5 போன் கால்கள்… மாமனாரை மருமகள் கொலை செய்த சம்பவத்தில் அம்பலமான அதிர்ச்சித் தகவல்..!! – cinefeeds
Connect with us

CRIME

26 கத்திக்குத்துகள்… கொலை நடந்த இரவில் மகனுக்கு வந்த 5 போன் கால்கள்… மாமனாரை மருமகள் கொலை செய்த சம்பவத்தில் அம்பலமான அதிர்ச்சித் தகவல்..!!

Published

on

கான்பூரில் மருந்து தொழிலதிபர் வினீத் மினோச்சா கொடூரமான முறையில் 26 கத்திக்குத்துகளுடன் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மகன் சுப்ரத்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த செப்டம்பர் 5ஆம் தேதி இரவில், கொலையாளி என்று சந்தேகிக்கப்படும் நபர் புதிய சிம் கார்டு மூலம் சுப்ரத்திற்கு 6 முறை போன் செய்த அதிர்ச்சித் தகவல் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இந்தக் கொலை தொடர்பாக வினீத்தின் முன்னாள் ஊழியரான விஷால் கவுதம் என்பவரின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் கொலை நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வாங்கிய புதிய சிம் கார்டு மூலம் சுப்ரத் மற்றும் அவரது மனைவி ஷாலு ஆகியோருடன் பேசியுள்ளார். மேலும், மே 1 முதல் செப்டம்பர் 5 வரை சுப்ரத் மற்றும் விஷால் இடையே சுமார் 309 முறை போன் தொடர்புகள் இருந்துள்ளதை 1,000 பக்கங்கள் கொண்ட அழைப்பு பதிவுகள் மூலம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

Advertisement

இந்த விவகாரத்தில் தொழிலதிபர் வினீத்தின் மருமகள் ஷாலு ஏற்கனவே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாமனாரைக் கொலை செய்ய விஷாலிடம் ரூ.6 லட்சம் தருவதாக ஷாலு பேரம் பேசியதாக விஷால் வாக்குமூலம் அளித்துள்ள போதிலும், ஷாலு இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். வினீத்தின் குடும்ப உயிலில் மருமகள் ஷாலுவின் பெயர் இல்லாததும், மகன் சுப்ரத்திற்கு அதிக கடன் சுமை இருந்ததும் இக்கொலைக்குக் காரணமா என்ற கோணத்தில் 6 போன் கால்களின் பின்னணியை நோக்கி போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in