“என் சொத்தை ஆசிரமத்துக்கு எழுதி வைப்பேன்டா” மிரட்டிய தந்தை குத்தி கொலை செய்த மகன்… மாரடைப்பு என நாடகமாடிய தாய்… இறுதிச் சடங்கில் அரங்கேறிய டுவிஸ்ட்..!! – cinefeeds
Connect with us

CRIME

“என் சொத்தை ஆசிரமத்துக்கு எழுதி வைப்பேன்டா” மிரட்டிய தந்தை குத்தி கொலை செய்த மகன்… மாரடைப்பு என நாடகமாடிய தாய்… இறுதிச் சடங்கில் அரங்கேறிய டுவிஸ்ட்..!!

Published

on

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே குடும்பத் தகராறில் சொத்துகளை ஆசிரமத்திற்கு எழுதி வைத்துவிடுவேன் என மிரட்டிய ஓய்வு பெற்ற அரசு ஊழியரான தந்தை சிவபாதம் (70) என்பவரைக் கொலை செய்த மகன் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த தாயாரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் வாலாஜாபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரங்கேறியுள்ளது.

பாதிக்கப்பட்ட சிவபாதத்திற்கும் அவருடைய மகன் மதுசூதனன் (39) என்பவருக்கும் இடையே சொத்து தொடர்பாகத் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. அப்போது, சொத்துகளை ஆசிரமத்திற்கு எழுதி வைக்கப் போவதாகத் தந்தை மிரட்டியதால் ஆத்திரமடைந்த மதுசூதனன், சிவபாதத்தைக் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இக்கொலையைத் தொடர்ந்து, சிவபாதத்தின் மனைவி (மதுசூதனனின் தாயார்) இந்த விவகாரத்தை மறைக்க மகனுக்கு உடந்தையாகச் செயல்பட்டுள்ளார்.

Advertisement

சிவபாதம் மாரடைப்பால் இயற்கையாகவே உயிரிழந்துவிட்டதாகத் தாயாரும் மகனும் சேர்ந்து உறவினர்களிடம் கூறி இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். எனினும், இறுதிச் சடங்கு நடந்து கொண்டிருந்த வேளையில் போலீசாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். தீவிர விசாரணையில் தந்தை மாரடைப்பால் இறக்கவில்லை என்பதும், கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதும் அம்பலமானதை அடுத்து தாய் மற்றும் மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in