பயங்கரம்..! “சின்ன வயசுல இருந்தே அந்த ஆசை” தோழியின் இரட்டை குழந்தையைக் கொன்று வாக்குமூலம் அளித்த பெண்…டயப்பரை மாற்றுவது போல் கொடூரம்…!! – cinefeeds
Connect with us

CRIME

பயங்கரம்..! “சின்ன வயசுல இருந்தே அந்த ஆசை” தோழியின் இரட்டை குழந்தையைக் கொன்று வாக்குமூலம் அளித்த பெண்…டயப்பரை மாற்றுவது போல் கொடூரம்…!!

Published

on

சான் டியாகோவைச் சேர்ந்த மருத்துவ உளவியல் முனைவர் பட்ட மாணவியான நிக்கோல் விர்சி (31), தனது தோழியின் 6 வாரமே ஆன இரட்டை ஆண் குழந்தைகளைப் பார்ப்பதற்காகப் பென்சில்வேனியாவிற்குச் சென்றுள்ளார். அங்கு ஒரு குழந்தையின் டயப்பரை மாற்றும்போது, அவரது பாலியல் உறுப்பு மற்றும் பிட்டம் பகுதியில் காயங்களை ஏற்படுத்தி இரத்தம் வர வைத்துள்ளார். இது குறித்துக் பெற்றோரிடம் அவர் கூறியதும், அவர்கள் அக்குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது மற்றொரு குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு நிக்கோலிடம் ஒப்படைக்கப்பட்டது.

பெற்றோர் மருத்துவமனையில் இருந்த நேரத்தில், தனியாக இருந்த இரண்டாவது குழந்தையைக் கொடூரமாக உலுக்கியும் பலமுறை தரையில் வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. காவல் துறையின் தீவிர விசாரணையின் போது, சிறு வயது முதலே குழந்தைகளுக்குத் தீங்கு விளைவிக்க வேண்டும் என்ற அடக்க முடியாத தூண்டுதல் தனக்கு இருந்ததாக நிக்கோல் ஒப்புக்கொண்டார்.

Advertisement

2024-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு பென்சில்வேனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர், நீதிமன்றத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார். அவரது வாக்குமூலம் அடங்கிய வீடியோ பதிவைச் சாட்சியமாக ஏற்க நீதிமன்றம் அனுமதித்துள்ள நிலையில், அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள் அவருக்கு மரண தண்டனை விதிக்கக் கோரி வழக்கை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் மீது பெண்கள் நடத்தும் இத்தகைய கொடூர குற்றங்கள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in