CRIME
“பாத்ரூம்ல வழுக்கி விழுந்து செத்துட்டா” நாடகமாடிய கணவன்… கர்ப்பிணி என்றும் பாராமல் நடந்த கொடூரம்… சந்தேகப் பேயால் ஒரு உயிரே அநியாயமா போச்சு…!!
மனைவியின் நடத்தை மீது ஏற்பட்ட அதீத சந்தேகத்தின் காரணமாக, கர்ப்பிணியான தனது மனைவியை கணவன் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரசுராம் என்ற நபர் ‘ரேபிடோ’ பைக்கின் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் இவருடைய மனைவி ஷிவானிக்கும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மதுபோதையில் இருந்த பரசுராம், மனைவியுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த வாக்குவாதத்தின் போது ஏற்பட்ட கடும் ஆத்திரத்தில், கண்மண் தெரியாமல் செயல்பட்ட பரசுராம், கர்ப்பிணி என்றும் பாராமல் ஷிவானியின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். கொடூரக் கொலையைச் செய்த பின்னர், அதிலிருந்து தப்பிப்பதற்காக ஒரு நாடகமாடியுள்ளார். ஷிவானி குளியலறைக்குச் சென்றபோது தற்செயலாகத் தரையில் வழுக்கி விழுந்து இறந்துவிட்டதாகக் கூறி, தனது குடும்பத்தினரையும் உறவினர்களையும் நம்ப வைக்கப் பரசுராம் கடுமையாக முயற்சி செய்துள்ளார்.
ஆனால், ஷிவானியின் மரணத்தில் சந்தேகம் அடைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர விசாரணை நடத்தினர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையின் போது முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய பரசுராம், இறுதியில் தப்பிக்க வழி தெரியாமல் தனது மனைவியை நானேதான் கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன் என்று வாக்குமூலம் அளித்துக் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, போலீசார் குற்றவாளியான பரசுராமை அதிரடியாகக் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
