வெறித்தனமான கிளைமேக்ஸ்..! துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய திருடர்கள்… பாய்ந்து சென்று திருடனின் கழுத்தைப் பிடித்த ரியல் ஹீரோ… வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

வெறித்தனமான கிளைமேக்ஸ்..! துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய திருடர்கள்… பாய்ந்து சென்று திருடனின் கழுத்தைப் பிடித்த ரியல் ஹீரோ… வைரல் வீடியோ..!!

Published

on

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பட்டப்பகலில் சினிமா பாணியில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவம் தொடர்பான அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஓய்வுபெற்ற மருத்துவருமான மகேந்திர ஜெயின் மற்றும் அவரது மனைவி சுசித்ரா ஜெயின் ஆகியோர் தங்களது ஸ்கூட்டரில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் அவர்களைப் பின்தொடர்ந்துள்ளனர். தனிமையான பாதையைக் கண்டதும், பின்னணியில் அமர்ந்திருந்த நபர் ஓடும் ஸ்கூட்டரில் கையை விட்டுப் பெண்ணின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றுள்ளான். ஆனால், எதிர்பாராதவிதமாக அந்த திருடர்களின் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி, இருவருமே சாலையில் பலமாக கீழே விழுந்தனர்.

கீழே விழுந்த போதிலும், திருடர்கள் தங்களது திமிரைக் குறைக்காமல் உடனடியாக எழுந்து பாக்கெட்டிலிருந்து ஒரு துப்பாக்கியை (போலித் துப்பாக்கி) எடுத்து அந்தப் பெண்ணைப் மிரட்டிப் பலவந்தமாக தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டனர். துப்பாக்கியைப் பார்த்ததும் அனைவரும் பயந்து ஓடிவிடுவார்கள் என்றும், தங்களால் எளிதாகத் தப்பிச் செல்ல முடியும் என்றும் அவர்கள் நினைத்தனர். ஆனால், அங்கு கருப்பு நிற பனியன் அணிந்திருந்த உள்ளூர் இளைஞர் ஒருவர் சற்றும் யோசிக்காமல், நொடிப் பொழுதில் பாய்ந்து சென்று ஒரு திருடனின் கழுத்தைப் பிடித்து மடக்கிப் பிடித்தார். அந்த இளைஞனின் தைரியத்தைப் பார்த்ததும் சுற்றியிருந்த மக்களும் உடனடியாக ஓடிவந்து இரு திருடர்களையும் சூழ்ந்து கொண்டு அவர்களுக்குத் தர்ம அடி கொடுத்துப் பாடம்புகட்டினர்.

Advertisement

இந்த முழு சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. ஆபத்தான சூழலிலும் சிறிதும் அஞ்சாமல் செயல்பட்ட அந்த உள்ளூர் இளைஞனின் வீரம் மற்றும் தைரியத்தை எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து சிவில் லைன்ஸ் காவல் நிலைய போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விசாரணை நடத்தி வந்தபோதிலும், இது தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வமாகப் புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. பொதுமக்கள் ஒன்று திரண்டால் குற்றவாளிகளின் கொட்டத்தை அடக்க முடியும் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் நிரூபித்துள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in