“கள்ளக்காதலனுடன் நிர்வாணமாக இருந்த தாய்..” நேரில் பார்த்த 14 வயது மகனுக்கு நேர்ந்த கொடூரம்.. திடுக்கிடும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“கள்ளக்காதலனுடன் நிர்வாணமாக இருந்த தாய்..” நேரில் பார்த்த 14 வயது மகனுக்கு நேர்ந்த கொடூரம்.. திடுக்கிடும் பின்னணி..!!

Published

on

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மகாராஜ்பூர் பகுதியில், கள்ளக்காதலனுடன் நிர்வாண நிலையில் இருந்த தாயை 14 வயது மகன் நேரில் பார்த்ததால், ஆத்திரமடைந்த தாயும் அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து சிறுவனைத் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்காதலனுடன் இருந்த தாயைப் பார்த்த அந்தச் சிறுவன், இதுகுறித்து உடனடியாகத் தனது தந்தைக்கு போன் செய்து கூறப்போவதாக மிரட்டியுள்ளான். இதனால் பயந்துபோன கள்ளக்காதல் ஜோடி, தங்களின் ரகசிய விவகாரம் வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகச் சிறுவனைப் பிடித்து, அவனது கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர்.

மகனைக் கொலை செய்த அந்தப் பாவித் தாய், விடிந்து விபரீதம் வெளியில் தெரியாமல் இருக்க, இரவு முழுவதும் மகனின் சடலத்தின் அருகிலேயே அமர்ந்து நாடகமாடியுள்ளார். தனது மகனுக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதாகவும், அதனால்தான் அவன் இறந்துவிட்டான் என்றும் கூறி உறவினர்களை நம்ப வைக்க முயன்றுள்ளார். ஆனால், இதில் சந்தேகமடைந்த யாரோ ஒருவர் கொடுத்த ரகசியத் தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார், சிறுவனின் கழுத்தில் இருந்த காயத் தழும்புகளைக் கவனித்துச் சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். அதன் பின்னரே, கள்ளக்காதலுக்காகப் பெற்ற மகனையே தாய் தீர்த்துக்கட்டிய கொடூர உண்மை அம்பலமானது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in