பகீர்… வீட்டுல இருந்து வந்த கெட்ட நாற்றம்… கதவை உடைச்சு ஃபிரிட்ஜைத் திறந்த போலீஸுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… கல்யாணம் முடிஞ்சு சில மாசத்துலயே நேர்ந்த கொடூரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

பகீர்… வீட்டுல இருந்து வந்த கெட்ட நாற்றம்… கதவை உடைச்சு ஃபிரிட்ஜைத் திறந்த போலீஸுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… கல்யாணம் முடிஞ்சு சில மாசத்துலயே நேர்ந்த கொடூரம்..!!

Published

on

அசாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்த தம்பதியினரை கடந்த இரண்டு நாட்களாகக் காணவில்லை என்றும், அவர்களின் மொபைல் போன்கள் அணைக்கப்பட்டுள்ளதாகவும் அண்டை வீட்டார் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். மேலும், அந்த வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதால், அங்கு வந்த காவல்துறையினர் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு 25 வயதான ரியா தாலுக்தார் என்ற பெண் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு, உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவரது விரல்கள் துண்டிக்கப்பட்டிருந்தன, உடலிலிருந்து தலை துண்டிக்கப்பட்டிருந்தது.

காவல்துறையினர் வீட்டைச் சோதனையிட்டபோது, ஃபிரிட்ஜிற்குள் ஒரு பாலித்தீன் பையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்தப் பெண்ணின் வெட்டப்பட்ட தலையைக் கைப்பற்றினர். பலியான ரியா தாலுக்தாருக்கு சில மாதங்களுக்கு முன்புதான் ராமானுஜ் கோஸ்வாமியுடன் திருமணம் நடந்திருந்தது தெரியவந்தது. சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவான கணவன் ராமானுஜைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

Advertisement

இந்தச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ராமானுஜ் கோஸ்வாமி, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் காவல்துறையினரிடம் தானே சரணடைந்தார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், திங்கள்கிழமை காலையில் காவலில் இருந்தபோது ராமானுஜ் தப்பிச் செல்ல முயன்றதாகவும், அவரைத் தடுக்க காவல்துறையினர் நடத்திய பதில் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in