CRIME
“அடக் கொடுமையே.. பூ பறிக்கச் சென்ற 2 இளைஞர்கள்..” அடுத்த நொடியே குளத்தில் நடந்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் கோருகொண்டா மண்டலத்தில், விநாயகர் சதுர்த்தி திருவிழாவிற்காக மலர்கள் பறிக்கச் சென்ற இரண்டு இளைஞர்கள் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவிழா வழிபாட்டிற்குத் தேவையான பூக்களைச் சேகரிப்பதற்காக வீரபாபு மற்றும் சிவா ஆகிய இருவரும் அங்குள்ள ஒரு குளத்திற்குள் இறங்கியுள்ளனர். குளத்தின் உட்பகுதி மிகவும் ஆழமாக இருந்தது குறித்து அறியாததால், அவர்கள் இருவரும் எதிர்பாராதவிதமாகத் தண்ணீருக்குள் சிக்கிக் கொண்டனர்.
தண்ணீரிலிருந்து வெளியே வர அவர்கள் இருவரும் போராடியும், இறுதியில் மூச்சுத்திணறி குளத்திலேயே தங்களது உயிரை விட்டனர். இந்த விபத்து குறித்துத் தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் இருவரின் உடல்களையும் மீட்டுள்ளனர். பண்டிகை கொண்டாட்டங்களின் போது எதிர்பாராமல் நேர்ந்த இந்த விபத்தினால், உயிரிழந்த வீரபாபு மற்றும் சிவாவின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
