CRIME
“அம்மா அப்பாகிட்ட சொல்லிடுவேன்” தாயை அந்த கோலத்தில் பார்த்த 14 வயது மகனின் மிரட்டல்… இரவோடு இரவாக பெத்த பிள்ளையை கொலை செய்த கொடூரம்..!!
கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது 14 வயது மகனைப் பெற்ற தாயே கொலை செய்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரவில் தாயும் அவரது கள்ளக்காதலனும் நெருக்கமாக இருந்ததை அந்தச் சிறுவன் நேரில் பார்த்துள்ளான். மேலும், இதுகுறித்து குஜராத்தில் வேலை பார்த்து வரும் தனது தந்தையிடம் கூறிவிடுவேன் என்று சிறுவன் மிரட்டியுள்ளான்.
இதனால் ஆத்திரமடைந்த கள்ளக்காத ஜோடி, தங்களின் ரகசியம் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக அந்தச் சிறுவனை கழுத்தை நெரித்துக் கொலை செய்தது. பின்னர், குஜராத்தில் இருக்கும் கணவருக்குத் போன் செய்து, மகன் கடுமையான வயிற்று வலி காரணமாகவே இறந்துவிட்டதாகக் கூறி நாடகமாடி உண்மையை மறைக்க முயன்றனர்.
ஆனால், சிறுவனின் உடலைத் தூக்க வந்த கிராம மக்கள் அவனது கழுத்தில் இருந்த காய வடுக்களைப் பார்த்து சந்தேகமடைந்து உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீஸார் அந்தப் பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினார். இறுதியாகக் காவல் துறையின் கிடுக்கிப்பிடி விசாரணையில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகனைக் கொன்றதை அவர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மொத்த சதித்திட்டமும் அம்பலமானது.
