“பிடிடா அவனை… வேகத்தடை போட்ட செக்மேட்…” தப்பியோட முயன்ற கொள்ளையனுக்கு பொதுமக்கள் கொடுத்த தரமான சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“பிடிடா அவனை… வேகத்தடை போட்ட செக்மேட்…” தப்பியோட முயன்ற கொள்ளையனுக்கு பொதுமக்கள் கொடுத்த தரமான சம்பவம்..!!

Published

on

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பைக்கில் சென்ற தம்பதியிடம் செயின் பறிக்க முயன்ற கொள்ளையர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். அஜ்மீர் சிவில் லைன்ஸ் சாலையில் பைக்கில் வந்த இரு முகமூடி கொள்ளையர்கள், அந்த வழியாக பைக்கில் வந்த தம்பதியரை வழிமறித்து, அவர்களின் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றனர். அப்போது சாலையில் இருந்த வேகத்தடையால் கொள்ளையர்களின் பைக் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். தம்பதியரும் நிலைதடுமாறி விழுந்தனர்.

அப்போது தம்பதியரின் கழுத்தில் இருந்த செயினை பறித்த கொள்ளையர்கள், பைக்கை எடுத்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றனர். ஆனால் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் துணிச்சலுடன் செயல்பட்டு கொள்ளையர்களைச் சுற்றிவளைத்து, அவர்களில் ஒருவரை மடக்கிப் பிடித்தனர். மற்றொருவர் அங்கிருந்து தப்பிஓடினார். பிடிபட்ட கொள்ளையனை சிவில் லைன்ஸ் போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். தப்பியோடிய குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in