“யாரிடமாவது சொன்னால்…” கழிவறைக்குச் சென்ற 19 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. வீடியோ எடுத்து மிரட்டிய காமப்பேய்கள்… நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“யாரிடமாவது சொன்னால்…” கழிவறைக்குச் சென்ற 19 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. வீடியோ எடுத்து மிரட்டிய காமப்பேய்கள்… நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!

Published

on

பீகார் மாநிலம் சமஸ்திபூரில் 19 வயது இளம்பெண் ஒருவர் இரண்டு இளைஞர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, மிரட்டலுக்கு பயந்து 8 மாதங்களாக மௌனமாக இருந்த அதிர்ச்சி சம்பவம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த ஜனவரி 23 அன்று இரவு 8 மணியளவில் அந்த இளம்பெண் கழிவறைக்குச் சென்றபோது, வழியில் மறைந்திருந்த ராகுல் குமார் சாஹ்னி மற்றும் விஜய் ஆகிய இருவரும் அவரைத் தூக்கிச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், இக்கொடூரச் செயலை வீடியோவாகப் பதிவு செய்த அந்த நபர்கள், அதை இணையத்தில் வைரலாக்கிவிடுவோம் என்றும், குடும்பத்தாரைக் கொலை செய்துவிடுவோம் என்றும் மிரட்டியதால், கிராமத்தில் ஏற்படும் அவமானத்திற்கும் உயிருக்கும் பயந்து அந்தப் பெண் யாரிடமும் கூறாமல் தவித்துள்ளார்.

இந்தக் கொடூரச் சம்பவம் நடந்து 8 மாதங்கள் கடந்த நிலையில், கடந்த செப்டம்பர் 8 அன்று அந்த வீடியோ இளம்பெண்ணின் தாயாரின் மொபைல் போனுக்கு அனுப்பப்பட்டதை அடுத்து உண்மை தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த தாயார் தனது மகளிடம் இதுகுறித்துக் கேட்க, அவர் அழுதுகொண்டே நடந்த உண்மைகளைக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 10 அன்று தாயார் முஸ்ரீ காரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து முக்கியக் குற்றவாளியான ராகுல் சாஹ்னியை அன்றே கைது செய்தனர். தப்பியோடிய மற்றொரு குற்றவாளியான விஜய்யை போலீசார் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், பயத்தின் காரணமாக ஒரு பெண் இத்தனை மாதங்கள் மௌனமாக இருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in