LATEST NEWS
“அய்யய்யோ.. ஓடும் ரயிலில் ஜன்னல் அருகே அமர்ந்திருந்த தாய்.. அடுத்த நொடியே நடந்த 9 மாத குழந்தைக்கு விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!!
சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலின் எமர்ஜென்சி ஜன்னல் வழியாக 9 மாதக் குழந்தை தவறி விழுந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் டெல்லி-ஹவுரா ரயில் பாதையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் ககாரியா மாவட்டத்தைச் சேர்ந்த மோகன் குமார் என்பவர், தனது மனைவி காஜல் மற்றும் 9 மாதக் குழந்தையுடன் டெல்லியிலிருந்து எக்ஸ்பிரஸ் ரயிலின் S-1 கோச்சில் பயணம் செய்துள்ளார். கான்பூர் மற்றும் பிரயாக்ராஜ் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்றுகொண்டிருந்தபோது, எமர்ஜென்சி ஜன்னல் அருகே அமர்ந்திருந்த தாயின் கையிலிருந்து குழந்தை எதிர்பாராதவிதமாக ஜன்னல் வழியாக தண்டவாளத்தில் தவறி விழுந்துள்ளது.
ரயில் பிரயாக்ராஜ் நிலையத்தை அடைந்ததும், பதறியடித்த பெற்றோர் உடனடியாக ரயில்வே பாதுகாப்புப் படையினரிடம் இதுகுறித்துத் தகவல் அளித்துள்ளனர்.குழந்தை விழுந்து 18 மணி நேரத்திற்கும் மேலாகியும், கான்பூர் முதல் பிரேம்பூர் வரையிலான ரயில் தண்டவாளப் பகுதிகளில் தீவிரத் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிரயாக்ராஜ் ரயில்வே எஸ்பி பிரசாந்த் குமார் மற்றும் ஜிஆர்பி அதிகாரி வினோத் குமார் தலைமையிலான குழுவினர், அந்தப் பாதையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதுடன், தண்டவாளப் பகுதிகளில் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர். பாதுகாப்புக்காக மூடப்பட்டிருக்க வேண்டிய எமர்ஜென்சி ஜன்னல் எப்படித் திறந்தது, குழந்தை எவ்வாறு கீழே விழுந்தது என்பது குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
