தொழில் முதலீடுகளை CM விஜய் எப்படி ஈர்க்கிறார் பாருங்க… ஃபோட்டோ மாறி வந்திருக்கு… CM விஜய்யின் லண்டன் பயணத்தை கிழித்தெறிந்த EPS..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தொழில் முதலீடுகளை CM விஜய் எப்படி ஈர்க்கிறார் பாருங்க… ஃபோட்டோ மாறி வந்திருக்கு… CM விஜய்யின் லண்டன் பயணத்தை கிழித்தெறிந்த EPS..!!

Published

on

தமிழக முதலமைச்சர் விஜய்யின் லண்டன் தொழில் முதலீட்டுப் பயணத்தை அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மிகக் கடுமையான தொனியில் விமர்சித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகி ஒருவரின் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் மற்றும் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களைச் சுட்டிக்காட்டி இந்தத் தாக்குதலைத் தொடுத்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது உரையில், “தமிழகத்திற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், மாநிலப் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காகவும் தான் முதலமைச்சர் வெளிநாடு செல்கிறார் என்று கூறினார்கள். ஆனால், இன்றைக்கு நாளிதழ்களில் வெளியாகி இருக்கும் புகைப்படங்களைப் பார்த்தால் வேறு மாதிரியான கதையைச் சொல்கிறது. அது யாருடைய புகைப்படம் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்” என லண்டன் சில்வர்ஸ்டோன் கார் பந்தய நிகழ்வில் விஜய் கலந்துகொண்ட புகைப்படங்களை மறைமுகமாகக் குறிப்பிட்டுச் சாடினார்.

Advertisement

மேலும், தமிழக முதலமைச்சர் லண்டனில் எந்தவொரு தொழில் முதலீட்டாளரையும் சந்தித்துப் பேசியதாகவோ அல்லது அதற்கான முயற்சிகளை மேற்கொண்டதாகவோ இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலோ அல்லது புகைப்படங்களோ வெளியாகவில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். மக்களின் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படும் இந்தப் பயணத்தில் தொழில் முதலீடுகளை அவர் எப்படி ஈர்க்கிறார் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும், அரசு நிர்வாகத்தின் இத்தகைய வெளிப்படைத்தன்மையற்ற போக்கை அதிமுக வன்மையாக எதிர்ப்பதாகவும் அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in