“அவனை கொன்னுடுங்கடா…” நடுரோட்டில் ஹாக்கி ஸ்டிக்கால் இளைஞரைக் கொடூரமாகத் தாக்கிய கும்பல்… வைரலாகும் திடுக்கிடும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“அவனை கொன்னுடுங்கடா…” நடுரோட்டில் ஹாக்கி ஸ்டிக்கால் இளைஞரைக் கொடூரமாகத் தாக்கிய கும்பல்… வைரலாகும் திடுக்கிடும் வீடியோ..!!

Published

on

நைனிடால் மாவட்டம் ராம்நகரில் உள்ள டிரான்ஸ்போர்ட் நகர் பகுதியில் சில இளைஞர்கள் சேர்ந்து ஒரு நபரை கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு இளைஞன் சாலையில் விழுந்துகிடக்கும் நபரை மேலே உட்கார்ந்து அசைய முடியாதவாறு பிடித்துக் கொள்ள, மற்றொரு இளைஞன் கையில் உள்ள ஹாக்கி ஸ்டிக்கால் அந்த நபரை இரக்கமின்றி சரமாரியாகத் தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மேலும், இந்த தாக்குதலின் போது அங்கு நின்றுகொண்டிருந்த மற்றொரு இளைஞன், தாக்கப்பட்ட நபரை “கொன்று விடுங்கள்” என்று தூண்டிவிடும் குரலும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த கொடூரமான தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பும் அதிர்ச்சியும் நிலவி வருகிறது.

Advertisement

வீடியோ வைரலானதை அடுத்து ராம்நகர் காவல்துறையினர் உடனடியாக களத்தில் இறங்கி விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து ராம்நகர் காவல் நிலைய அதிகாரி சுஷீல் குமார் கூறுகையில், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், வீடியோவில் காணப்படும் நபர்களை அடையாளம் காணும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். அடையாளங்கள் உறுதி செய்யப்பட்ட பிறகு சம்பந்தப்பட்ட அனைத்து நபர்கள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in